/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கூடலுாரில் நடந்த சினிமா சூட்டிங் - காலையில் மறுப்பு, மாலையில் அனுமதி

ADDED : மே 18, 2025 03:25 AM
கூடலுார்: கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்டில் சினிமா சூட்டிங் நடத்த காலையில் போலீசார் அனுமதி மறுத்த நிலையில், மாலையில் அனுமதி வழங்கப்பட்டு நடந்தது.
ஜீவா கதாநாயகனாக நடித்து வரும் 'ஓ.ஜி. 2 வீடு' என்ற தமிழ் சினிமா சூட்டிங் கடந்த சில நாட்களாக தமிழக கேரள எல்லையோரத்தில் உள்ள குமுளி, லோயர்கேம்ப், பளியன்குடி உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வருகிறது. நேற்று காலையில் கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்டில் சினிமா சூட்டிங் நடத்த குழுவினர் ஆயத்தமாகினர். குமுளி, லோயர்கேம்ப், பளியன்குடி மலையடிவாரப் பகுதியில் மட்டுமே அனுமதி பெறப்பட்டுள்ளதாகக் கூறி போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதனால் இப்பகுதி பரபரப்பாக இருந்தது. திரைப்படக் குழுவினர் பேக்கப் செய்து சென்றனர்.
அதன்பின் அனுமதி கடிதத்தை பெற்று போலீசாரிடம் கொடுத்தனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் டூவீலர் பேரணி இப்பகுதியை கடந்து சென்ற பின் மாலையில் சினிமா சூட்டிங் நடந்தது.