/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்
/
தேனியில் சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 31, 2024 06:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் முன் சி.ஐ.டி.யு., கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்பாட்டத்தில் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் தொகை ரூ.3 ஆயிரமாக வழங்க வேண்டும், பெண்களுக்கு 55 வயதில் இருந்து ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
காணாமல் போன தொழிலாளர் நலவாரிய தரவுகளை மீட்டெடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடினர். கட்டுமான தொழிலாளர் சங்க மாநில குழு உறுப்பினர் பிச்சை மணி தலைமை வகித்தார்.
சி.ஐ.டி.யு., மாவட்டத் தலைவர் ஜெயப்பாண்டி, செயலாளர் ராமசந்திரன், தொழிலாளர் சங்க தலைவர் சண்முகம், நிர்வாகிகள் முத்து ராமலிங்கம், வெற்றி கணேஷ், கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.