/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
புதர் மண்டிய பூமாலை வணிக வளாகத்தில் துாய்மை பணி தினமலர் செய்தி எதிரொலி

ADDED : ஜூலை 09, 2025 07:45 AM

போடி: சில்லமரத்துப்பட்டி மெயின் ரோட்டில் உள்ள பூமாலை வணிக வளாக கடைகள் முன் புதர் மண்டியதை தினமலர் செய்தி எதிரொலியால் அகற்றப்பட்டன.
சில்லமரத்துப்பட்டி ஊராட்சி மூலம் தேவாரம் செல்லும் மெயின் ரோட்டில் ஒன்றிய பொது நிதியில் ரூ. பல லட்சம் மதிப்பில் பூமாலை வணிக வளாகம் கட்டப்பட்டு உள்ளன. இவை 15 ஆண்டுகளாக பயன்பாடின்றி காட்சி பொருளாக உள்ளது. பராமரிப்பு இல்லாததால் கடைகளின் ஷட்டர்கள் பழுதடைந்து முட்புதர்களால் சூழ்ந்து இருந்தன.
ஆனால் அருகே வசிப்போர் தங்கள் சொந்தஇடத்தில் கடைகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர். ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாதால் வணிக வளாக கடைகள் பல ஆண்டுகளாக பயன்பாடு இன்றி உள்ளன.
சமூக வலது செயல்கள் நடக்கும் கூடாரமாக பயன்படுத்தி வருகின்றனர். ஊராட்சி நிர்வாகத்திற்கு ஆண்டு தோறும் ரூ. பல ஆயிரம் வருமான இழப்பு ஏற்படுகின்றன. கடைகளை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதனை தொடர்ந்துவணிக வளாகத்தில் முட்புதர்கள் அகற்றப்பட்டன.