/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பால் உற்பத்தி குறையும் அபாயம்
/
சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பால் உற்பத்தி குறையும் அபாயம்
சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பால் உற்பத்தி குறையும் அபாயம்
சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பால் உற்பத்தி குறையும் அபாயம்
ADDED : நவ 22, 2024 05:18 AM
கம்பம்; கம்பம் பள்ளத்தாக்கில் சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் காணப்படுவதால் பால் உற்பத்தி குறையும் அபாயம் உள்ளது. கம்பம் பள்ளத்தாக்கில் சில மாதங்களாக மழை விட்டு விட்டு பெய்து வந்தது.
ஒருவாரமாக லேசான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்களாக வானம் மேக மூட்டமாக உள்ளது. பனியும் குளிரும் சேர்ந்து வீசுகிறது.
வெயில் இன்றி குளிர் சீதோஷ்ண நிலை மாற்றத்தால், பசுக்கள், எருமைகள் பால் கறப்பது அளவு குறைகிறது.
இது குறித்து கால்நடை டாக்டர்கள் கூறுகையில்,' திடீர் சீதோஷ்ண நிலையில் மாற்றத்தால் பசுக்கள், எருமை மாடுகள் சரிவர தண்ணீர் குடிக்காது. ஒருவித மன அழுத்தத்தில் இருக்கும்.
எனவே பால் சுரப்பு குறையும். கோடை காலத்திலும் இது போன்ற நிலை தான் இருக்கும். ஆனால் கோடை காலத்தை போன்று பெரிய அளவில் உற்பத்தி குறையாது. சீதோஷ்ண நிலை மாறினால் மீண்டும் உற்பத்தி சீராகிவிடும்', என்கின்றனர்.