/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பஸ் ஸ்டாண்டில் முடங்கிய துணிப்பை இயந்திரம்
/
பஸ் ஸ்டாண்டில் முடங்கிய துணிப்பை இயந்திரம்
ADDED : ஆக 18, 2025 06:14 AM

போடி போடி பஸ் ஸ்டாண்டில் பொது மக்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்ட துணிப்பை இயந்திரம் மின் இணைப்பு இன்றி முடங்கிய நிலையில் உள்ளது.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பல்வேறு இடங்களில் ரூ.10க்கு துணிப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம் பொருத்தப்பட்டு உள்ளன. பாலிதீன், பிளாஸ்டிக் பை பயன் படுத்துவதற்கு பதிலாக போடி நகராட்சி மூலம் போடி பஸ் ஸ்டாண்டில் ரூ.10 செலுத்தி துணிப்பை பெறுவதற்காக தானியங்கி இயந்திரம் 2 ஆண்டுகளுக்கு முன் பொருத்தப்பட்டன. ஓராண்டுக்கு முன்பு வரை 700 துணிப்பை மட்டுமே வழங்கப்பட்டு உள்ளன. அதன் பின் மின் இணைப்பு இல்லாததால் இயந்திரம் செயல்பாடு இன்றி காட்சி பொருளாக உள்ளது. தற்போது ரூ.10 செலுத்தினால் துணிப்பை வருவது இல்லை. செலுத்திய ரூ.10 மட்டுமே வெளியே வருகிறது. மக்களிடமும் போதிய விழிப்புணர்வு இன்றி பாலிதீன் பயன்பாடு தாராளமாக உள்ளது. இதனை கண்காணிக்கும் நகராட்சி, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் கண்டு கொள்வது இல்லை. பாலிதீன், பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்து, துணிப்பை இயந்திரத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர போடி நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.