/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சம்பள உயர்வுக்காக காத்திருக்கும் கூட்டுறவு சங்க பணியாளர்கள்
/
சம்பள உயர்வுக்காக காத்திருக்கும் கூட்டுறவு சங்க பணியாளர்கள்
சம்பள உயர்வுக்காக காத்திருக்கும் கூட்டுறவு சங்க பணியாளர்கள்
சம்பள உயர்வுக்காக காத்திருக்கும் கூட்டுறவு சங்க பணியாளர்கள்
ADDED : செப் 23, 2024 02:17 AM
தேனி: 'தமிழக அரசு அறிவித்த சம்பள உயர்வை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும்,' என, கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தேனியில் டாக்பியா சங்க மாநில பொதுச் செயலாளர் காமராஜ்பாண்டியன் கூறியதாவது: தமிழகத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இதில் பணிபுரிபவர்களுக்கான சம்பள ஒப்பந்தம் மார்ச் 2023ல் முடிந்தது. பணியாளர்களுக்கு 20 சதவீதம் சம்பளத்தை உயர்த்த கோரிக்கை விடப்பட்டது. ஆனால், 10 சதவீதம் சம்பளம் உயர்த்தி வழங்குகிறோம் என ஜூலையில் அறிவித்தனர். இதுவரை வழங்கவில்லை.
அதே போல நகர கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கும் சில நாட்களுக்கு முன் சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டது. இதில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கும், நகர கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கும் இடையே உள்ள சம்பள முரண்பாட்டை களைய வலியுறுத்தி அமைச்சர் பெரியகருப்பன், பதிவாளர் சுப்பையனிடம் மனு அளித்துள்ளோம். உயர்த்தப்பட்ட சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.