/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்டத்தில் உற்பத்தி சரிவால் தேங்காய் விலை... உயர வாய்ப்பு: வீரியமிக்க ரகங்கள் கண்டுபிடிக்க வலியுறுத்தல்

ADDED : ஜூலை 17, 2025 03:22 AM

இந்தியாவில் தென்னை அதிகம் சாகுபடி செய்துள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். இங்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்களில் அதிகம் சாகுபடியாகிறது. தேனி மாவட்டத்தில் சுமார் 26,810 எக்டேரில் தென்னை சாகுபடியாகிறது. கடந்த சில ஆண்டுகளாக தென்னை மரங்கள் பல்வேறு நோய் பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, வேர்வாடல் நோய், சாறு உறிஞ்சிகள், கரும்பூஞ்சை தாக்குதல், வெள்ளை ஈ தாக்குதல் அதிகம் உள்ளது. இதனால் உற்பத்தி தொடர் சரிவை சந்தித்து வருகிறது.
உதாரணமாக ஒரு ஏக்கரில் 750 காய்கள் வெட்டப்படுகிறது என்றால் தற்போது அதிகபட்சம் 250 காய்கள் வெட்டப்படுகின்றன. தேங்காய்களின் எடை சில ஆண்டுகளுக்கு முன் சராசரியாக குறைந்த பட்சம் 500 கிராம் முதல் அதிகபட்சம் ஒரு கிலோ வரை இருந்தது. ஆனால் தற்போது அதிகபட்ச எடை 600 கிராம் தான். இதனால் விலை உயர்வு தொடர்ந்தாலும், விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
விலை உயர வாய்ப்பு
மாவட்டத்தில் தேங்காய் 2022, 2023 ஜூலையில் கிலோ ரூ.25க்கு விற்பனையானது. ஜூலை 2024ல் கிலோ ரூ. 30க்கு விற்பனையானது.
ஆனால் இந்தாண்டு கிலோ ரூ. 70க்கு விற்பனையாகிறது. மழைகாலம் துவங்கி விட்டால் தேங்காய் உற்பத்தி குறையும். அதே நேரம் ஆடி மாத திருவிழாக்கள், அதைத் தொடர்ந்து வரும் விஷேச நாட்களில் தேங்காய்களின் தேவை அதிகம் இருக்கும். இதனால் மேலும் விலை உயர வாய்ப்புள்ளது.