/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காட்டு யானைகளால் தென்னங்கன்றுகள் சேதம்
/
காட்டு யானைகளால் தென்னங்கன்றுகள் சேதம்
ADDED : மே 22, 2025 04:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு அருகே மேலப்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்நாதன் 50, இவருக்கு சொந்தமான நிலம் சம்போடை மலை அடிவாரத்தில் உள்ளது.
தனது நிலத்தில் இரண்டு ஏக்கரில் தென்னை, இலவ மரங்கள் நட்டுள்ளார்.
250 தென்னங்கன்றுகள் நட்டு மூன்று ஆண்டுகளாக பராமரித்து வருகிறார். இரு நாட்களுக்கு முன் நள்ளிரவில் வந்த காட்டு யானைகள் கூட்டம் செந்தில்நாதன் தென்னந்தோப்பில் இருந்த 90க்கும் மேற்பட்ட வளர்ந்த தென்னை மரங்களை பிடுங்கி சேதப்படுத்தி விட்டது.
யானைகளால் சேதப்படுத்தப்பட்ட தென்னை மரங்களுக்கு வனத்துறை, வருவாய்த்துறையினர் இழப்பீடு வழங்க இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.