/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காட்டு யானைகள் தாக்கி தென்னை மரங்கள் சேதம்
/
காட்டு யானைகள் தாக்கி தென்னை மரங்கள் சேதம்
ADDED : ஜூலை 14, 2025 02:47 AM
ஆண்டிபட்டி: கடமலைக்குண்டு அருகே விளை நிலங்களில் புகுந்த காட்டு யானைகள் தென்னை, வாழை மரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
கடமலைக்குண்டு அய்யனார் கோயில் அருகே தம்புரான் மலை அடிவாரத்தில் விவசாயிகளுக்கு சொந்தமான பட்டா நிலங்களில் தென்னை, வாழை மரங்களை வைத்து பராமரிக்கின்றனர். தென்னந்தோப்பில் புகுந்த காட்டு யானைகள் அங்கிருந்த 180 தென்னை மரங்களை பிடுங்கி சேதப்படுத்தி உள்ளது. அதே பகுதியில் அய்யனார்புரம் கணேசன் என்பவரின் வாழை தோட்டத்தில் 30 வாழை மரங்களையும் சேதப்படுத்தி உள்ளன. யானைகளால் சேதம் அடைந்த தென்னை, வாழை மரங்களை வனத்துறையினர் பார்வையிட்டனர். அடிக்கடி காட்டு யானைகள் வந்து விளை நிலங்களில் சேதம் ஏற்படுத்துவதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். குடியிருப்பு, விவசாய நிலங்களில் காட்டு யானைகள் வராமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என, பாதிக்கப்பட்ட விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

