ADDED : மார் 27, 2025 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மதுரை வேளாண் கல்லுாரி 4ம் ஆண்டு மாணவிகள் லலிதாஸ்ரீ, லிசோனி, மதுமிதா, மீனாட்சி மகாலட்சுமி, மகாராணி, மாளவிகா, மமதி ஆகியோர் கிராமப்புற வேளாண் பணி அனுபவ திட்டத்தில் ஆண்டிபட்டி பகுதியில் தங்கி விவசாயிகளிடம் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ராமகிருஷ்ணாபுரம் கிராமம் விவசாயி ஜெயக்குமார் வயலில் பீட்ரூட் விதைகள் நடவு முறைகளை கற்றறிந்தனர்.
ராஜக்கால்பட்டி பகுதிக்கு சென்ற மாணவிகள் நேற்று பொது மக்களிடம் தேங்காய் மூலம் மதிப்பு கூட்டல் பொருட்களை தயாரிக்கும் விதம், சந்தைப்படுத்துதல் குறித்து இறுதியாண்டு மாணவி மமதி விளக்கினார்.