/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இல்லாத திட்டங்களை கூறி பொதுமக்களிடம் கட்டணம் வசூல் - கூடலுார் போலீசில் பா.ஜ.,வினர் புகார்

ADDED : நவ 15, 2024 05:33 AM
கூடலுார்: இல்லாத திட்டங்களை மோடியின் பெயரைக் கூறி பொது மக்களிடம் கட்டணம் வசூல் செய்த கரூரைச் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கூடலுார் பா.ஜ.,வினர் போலீசில் புகார் செய்தனர்.
கூடலுார் பா.ஜ., நகரத் தலைவர் முருகேசன் நிர்வாகிகளுடன் சென்று வடக்கு போலீசில் கொடுத்த புகார் மனுவில்:
கரூரைச் சேர்ந்த காமராஜ் உள்ளிட்ட 25 பேர்கள் கூடலுார் புதிய வாரச்சந்தை கட்டடத்தில் பொது மக்களை அழைத்து பல்வேறு திட்டங்களில் பணம் பெற்று தருவதாக பேசினர்.
இதில் வீடு இல்லாதவர்களுக்கு 2 சென்ட் காலி இடம் கொடுப்பது, விதவைகளுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்குவது உள்ளிட்ட திட்டங்கள் பிரதமர் மோடியின் பெயரில் இருப்பதாகக் கூறி பொது மக்களிடம் தலா ரூ.150 வீதம் கட்டணமாக வசூல் செய்தனர்.
பிரதமர் மோடியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், இல்லாத திட்டங்களை கூறி பொது மக்களிடம் கட்டண வசூல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.