/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கட்சியினர் குற்ற பின்னணி விபரம் சேகரிப்பு
/
கட்சியினர் குற்ற பின்னணி விபரம் சேகரிப்பு
ADDED : ஜன 09, 2025 05:48 AM
தேனி: அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள், தொண்டர்கள் குற்றப்பின்னணி விபரங்களை சேகரித்து பட்டயலிடும் பணிகளை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.தமிழக சட்டசபை தேர்தல் 2026 நடைபெற உள்ளது. அதற்கான ஆயுத்தப் பணிகளாக அரசியல் கட்சிகள் பூத் கமிட்டி நிர்வாகிகள், கட்சி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வருகின்றன.
மாநில கட்சியாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்றுள்ள தி.மு.க., அ.தி.மு.க., உட்பட பிற அரசியல் கட்சிகளில் நிர்வாகிகளாக உள்ளவர்களில் குற்ற வழக்கு பின்னணியில் இருந்தால் அவர்களை பட்டியலிட்டு மேலிடத்திற்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் உள்ள 5 சப் டிவிஷன் போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ள குற்ற வரலாற்று பதிவேடுகளில் உள்ளஅரசியல் பிரமுகர்கள், தொண்டர்கள் விபரங்கள் சேகரிக்கப்படும் பணி தீவீரப்படுத்தப்பட்டு உள்ளன.