/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மங்கலதேவி கண்ணகி கோயிலில் கலெக்டர் ஆய்வு பக்தர்கள் சிரமமின்றி வழிபட வசதி
/
மங்கலதேவி கண்ணகி கோயிலில் கலெக்டர் ஆய்வு பக்தர்கள் சிரமமின்றி வழிபட வசதி
மங்கலதேவி கண்ணகி கோயிலில் கலெக்டர் ஆய்வு பக்தர்கள் சிரமமின்றி வழிபட வசதி
மங்கலதேவி கண்ணகி கோயிலில் கலெக்டர் ஆய்வு பக்தர்கள் சிரமமின்றி வழிபட வசதி
ADDED : மே 01, 2025 01:54 AM

கூடலுார்:மங்கலதேவி கண்ணகி கோயிலில் சித்ரா பவுர்ணமி விழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து தேனி கலெக்டர் ரஞ்சீத் சிங் ஆய்வு மேற்கொண்டார்.
தேனி மாவட்டம், கூடலுார் அருகே தமிழக கேரள எல்லை விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். ஒவ்வொரு ஆண்டும் இக்கோயிலில் சித்ரா பவுர்ணமி தினத்தன்று விழா கொண்டாடப்படும்.
இந்த ஆண்டு மே 12ல் விழா கொண்டாடப்படுகிறது. கோயிலுக்கு செல்லும் ஜீப் பாதை கேரள வனப்பகுதி வழியாக இருப்பதால் விழா நடப்பதற்கு முன் இரு மாநிலங்களைச் சேர்ந்த கலெக்டர் தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடத்தி அதன்படி விழா கொண்டாடப்படும். இக்கூட்டம் சமீபத்தில் நடந்தது.
கோயிலில் பக்தர்கள் எவ்வித சிரமமுமின்றி தரிசனம் செய்ய முன்னேற்பாடுகள் குறித்து நேற்று கலெக்டர் ரஞ்சீத் சிங் கோயில் வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டார். வளாகம் முழுவதும் முட்புதர்களாய் இருப்பதை சீரமைக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் போக்குவரத்து வசதி, சுகாதார வசதி, குடிநீர், தற்காலிக பந்தல்கள், தற்காலிக கழிப்பிட வசதி, கோயிலுக்கு செல்லும் பாதையை சீரமைப்பது, முதலுதவி வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைப்பது, வனவிலங்குகளால் பொதுமக்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாத வண்ணம் தடுப்பு வேலிகள் அமைப்பது, மருத்துவ முகாம்கள் அமைப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆய்வில் உதவி வன பாதுகாவலர் அரவிந்த், ஆர்.டி.ஓ., சையது முகமது, டி.எஸ்.பி. வெங்கடேசன், தாசில்தார் கண்ணன், சுகாதார ஆய்வாளர் விவேக் உடன் இருந்தனர்.

