/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை தீவிரப்படுத்த கலெக்டர் அறிவுறுத்தல்

ADDED : அக் 30, 2024 05:03 AM
தேனி : மாவட்டத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என கலெக்டர் ஷஜீவனா அறிவுறுத்தி உள்ளார்.
கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது தொடர்பான கூட்டம் நடந்தது. பெரியகுளம் சப்கலெக்டர் ரஜத்பீடன், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., தாட்சாயினி, கலால் உதவி ஆணையர் ரவிசந்திரன் முன்னிலை வகித்தனர். நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள், வேளாண், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், தாசில்தார்கள், மஞ்சாளாறு நீர்வள கோட்டபிரிவு, பொதுப்பணித்துறையினர், நிலஅளவைத்துறையினர் பங்கேற்றனர்.
மாவட்டத்தில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள், நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சிபகுதிகள், நகர்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை தீவிரப்படுத்த வேண்டும்.
ஆக்கிரமிப்பில் உள்ளவர்கள் பற்றி தீர விசாரித்து அவர்களுக்கு மாற்று இடங்கள் வழங்க தாசில்தார்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.