/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கல்குவாரிகளில் விதிமுறைகளை மீறி வெடி வெடித்தால் வழக்கு; விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் உத்தரவு
/
கல்குவாரிகளில் விதிமுறைகளை மீறி வெடி வெடித்தால் வழக்கு; விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் உத்தரவு
கல்குவாரிகளில் விதிமுறைகளை மீறி வெடி வெடித்தால் வழக்கு; விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் உத்தரவு
கல்குவாரிகளில் விதிமுறைகளை மீறி வெடி வெடித்தால் வழக்கு; விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் உத்தரவு
ADDED : ஏப் 26, 2025 05:35 AM

தேனி : கல்குவாரி, கிரஷர்களில் விதிமுறைகளை மீறி வெடிவைப்பதால் விவசாயம், குடியிருப்புகளுக்கு இடையூறு ஏற்பட்டால் புகார்களை பெற்று, உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து,நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என, கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்தார்.
தேனியில் விவசாயிகள் குறை தீர் கூட்டம் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., மகாலட்சுமி, வேளாண் இணை இயக்குனர்சாந்தாமணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) வளர்மதி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:கருப்பையா, பூதிப்புரம்: நான் கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வராக இருந்து ஓய்வு பெற்று விவசாயம் செய்து வருகிறேன். வயல்பட்டி, சத்திரப்பட்டி வீரபாண்டி பகுதிகளில் அறுவடையாகும்நெல் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டி உலர்த்துகின்றனர். இதனைதவிர்க்க உலர்களம் அமைத்துத்தர வேண்டும்.
டி.ஆர்.ஓ.,: எங்கு அமைக்க கூறுகிறீர்களோ, அங்கு சாத்திய கூறுகளை ஆய்வு செய்து அமைத்து தருகிறோம்.
விவசாயம் பாதிப்பு
ஆறுமுகம்,சின்னமனுார்: புலிக்குத்தி, பொட்டிப்புரம் பகுதிகளில் உள்ள கல்குவாரிகளுக்குஅருகில் உள்ள நிலங்களில் அதிக திறன் மிக்க வெடி வைத்து, கற்கள் எடுப்பதால் விவசாயநிலங்களில் உள்ள போர்வேல் மண் நிரம்பி, பழுதாகின்றன. தொடரும் இதுபோன்ற பாதிப்பால் விவசாய சாகுபடி பாதிக்கப்படுகிறது.
கலெக்டர்: ஆண்டிபட்டி, சின்னமனுார், பெரியகுளம் பகுதியில் அடிக்கடி இதுபோன்ற புகார்கள்வருகின்றன. கல்குவாரி, கிரஷர் யூனிட்கள் விதிமுறைகளை மீறி நடந்தால் புகார் அளிக்க வேண்டும். ஆதாரமற்ற புகார் தெரிவிக்க கூடாது. மாவட்டத்தில் கல்குவாரி, கிரஷர்களில் விதிமீறி வெடிவைப்பதால் பயிர் பாதிப்பு, குடியிருப்புகளுக்கு இடையூறு ஏற்பட்டால் புகார் பெற்று, குவாரி உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜேந்திரன், வெங்கடாசலபுரம்: தோட்டத்தில் உள்ள மின்மோட்டார் பம்ப் செட்களில் காப்பர்ஓயர்கள் தொடர்ந்து, திருடு போவது தொடர்கிறது. வீரபாண்டி, கண்டமனுார் போலீஸ் ஸ்டேஷன்களில்பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்க வில்லை.
கலெக்டர்: போலீஸ் தரப்பில் எடுத்த நடவடிக்கை குறித்து தகவல் அளிக்கவும்
கண்மாயில் இறைச்சி கழிவுகள்
சீனிராஜ், மாவட்டத் தலைவர், தமிழக தேசிய விவசாயிகள் சங்கம்: பெரியகுளம், கம்பம், அல்லிநகரம்,பூதிப்புரம், மீனாட்சிபுரம் கண்மாய்களில் மீன்வளர்ப்பு நடந்து வருகிறது. இதில் மீன்களுக்கு இறையாககோழி, மாட்டிறைச்சி கழிவுகளை போடு கின்றனர். இதனால் கண்மாய் நீர் கால்நடைகள் குடிப்பதற்குஉகந்ததாக இல்லை. இதனால் நோய் பாதிக்கப்பட்டு, கால்நடைகள் இறக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.பொதுப்பணித்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.
பாண்டியன், தலைவர், தமிழக விவசாயிகள் சங்கம், பெரியகுளம்: கரும்பு சக்கை, மக்காச்சோளகழிவு உள்ளிட்ட கழிவுகள் மூலம் இயற்கை நுண்ணுயிர் தயாரித்து வழங்கினால் விவசாயிகளுக்கு பயன்படும்.
வெற்றிவேல், விவசாயி, அகமலை: ஊரடி, ஊத்துக்காடு, சொக்கனலை மலை கிராமங்களில்அரசின் ஆரம்ப பள்ளிகள் இயங்கின. தற்போது பள்ளிகள் நடத்தப்படாமல் உள்ளதால், நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி கற்காமல் உள்ளனர். கலெக்டர் நேரில் வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.