/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வெவ்வேறு 'எமிஸ் ஐ.டி.,' களில் இரு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அறிக்கை சமர்ப்பிக்க கலெக்டர் உத்தரவு

ADDED : ஆக 13, 2025 02:20 AM
தேனி: ஒரே மாணவர் பெயரில் இரண்டு, அதற்கு மேற்பட்ட பள்ளிகளில் மாணவர்கள் விபரங்கள் பதிவு செய்யப்பட்டதை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளதாக கல்வித்துறையினர் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் அரசுபள்ளிகள் 530, உதவி பெறும் பள்ளிகள் 216, தனியார்பள்ளிகள் 174 என மொத்தம் 900க்கும் அதிகமான பள்ளிகள் செயல்படுகின்றன. இதில் அரசு, உதவிபெறும் ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளில் பராமரிக்கப்படும் மாணவர்கள் வருகைப்பதிவேடுகள், எமிஸ் தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கும், மாணவர்களின் வருகைக்கும் இடையே வித்தியாசம் அதிகரித்தது. இதனை சில அதிகாரிகள் பள்ளிகளுக்கு ஆய்வு சென்ற போது உறுதி செய்தனர். உதாரணமாக ஒரு பள்ளியில் வருகைபதிவேட்டில் 27 மாணவர்கள் உள்ளனர். ஆய்விற்கு செல்லும் போது வகுப்பில் 12 பேர் மட்டும் உள்ளனர். வகுப்பறையில் உள்ள மாணவர்களிடன் விசாரித்தால், மற்ற மாணவர்கள் வகுப்பில் இல்லை என்பதும், பதிவேட்டில் உள்ள சிலர் வேறு பள்ளிகளில் படிப்பதையும் அறிந்தனர். இவ்வாறு வருகைப்பதிவேடு குளறுபடி பிரச்னை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு சென்றது.
பள்ளிகளில் பதிவு செய்யப்பட்ட எமிஸ் ஐ.டி., பராமரிக்கப்படும் வருகைபதிவேடு ஆகியவற்றில் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வருகை தருகின்றனரா. ஒரே மாணவர் பெயரில் வெவ்வேறு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனரா என எமிஸ் ஐ.டி., மூலமும் ஆய்வு செய்ய வேண்டும். இதற்காக வட்டாரம் வாரியாக குழு அமைத்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தரவிட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.