/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஜமாபந்தி விருந்தில் கலெக்டர் பங்கேற்பு
/
ஜமாபந்தி விருந்தில் கலெக்டர் பங்கேற்பு
ADDED : பிப் 22, 2024 06:12 AM
உத்தமபாளையம், : உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஆனைமலையன்பட்டியில் நடைபெற்ற ஜமாபந்தி விருந்தில் கலெக்டர் ஷஜீவனா பங்கேற்றார்.
தமிழக அரசின் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள அரசு அலுவலகங்களை ஆய்வு செய்தல், மக்கள் குறை கேட்டல், கள ஆய்வு செய்தல் உள்ளிட்ட பணிகளை கலெக்டர் ஷஜீவனா நேற்று மேற்கொண்டார்.
உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை, பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து வட்டார போக்குவரத்து பகுதி நேர அலுவலகத்தில் ஆய்வு நடத்தினார். ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா, உரிய முறையில் கணினி பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார். ஆதி திராவிடர் நலத் துறை சார்பில் ஆனைமலையான் பட்டியில் நடந்த ஜமபந்தி விருந்தில் பங்கேற்றார். அவருடன் எஸ்.பி., சிவபிரசாத், டி.ஆர்.ஓ. ஜெயபாரதி, ஆர்.டி.ஒ., பால்பாண்டியன், ஊராட்சி தலைவர் மீனா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்றனர். தொடர்ந்து பல்வேறு அலுவலகங்களில் கலெக்டர் திடீர் ஆய்வு நடத்தினார்.