/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காப்பாற்றியவர்களுக்கு கலெக்டர் பாராட்டு
/
காப்பாற்றியவர்களுக்கு கலெக்டர் பாராட்டு
ADDED : டிச 20, 2024 03:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி பென்னிகுவிக் நகர் கோவிந்த ராஜ் 78. நேற்று முன்தினம் காலை முல்லைப்பெரியாற்றில் குளிக்க சென்றவர் தவறி விழுந்தார்.
நீரின் வேகத்தில் ஆற்றில் இழுத்து செல்லப்பட்டார். கோட்டைப்பட்டி படித்துறையில் குளித்துக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ரேணுகா, மீனா, சித்ரா,சாந்தி ஆற்றில் ஒருவர் அடித்து செல்வதாக கூறி கூச்சலிட்டனர்.
அப்பகுதியாக சென்ற குமரேசன், பெண்கள் இணைந்து முதியவரை மீட்டனர்.
அவரை 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உதவியுடன் உறவிர்களிடம் ஒப்படைந்தனர்.
முதியவரின் உயிரை காப்பாற்றிய குமரேசன், பெண்களை நேரில் அழைத்து கலெக்டர் ஷஜீவனா வாழ்த்தினார். பெரியகுளம் சப்-கலெக்டர் ரஜத் பீடன் உடனிருந்தனார்.