/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குவாரிகளில் இருந்து செல்லும் அனைத்து கனிமங்களுக்கும் இ-பெர்மிட் கட்டாயம் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் அறிவிப்பு

ADDED : ஏப் 05, 2025 05:32 AM
தேனி: 'குவாரியிலிருந்து எடுத்துச் செல்லும் அனைத்து வகை கனிமங்களுக்கும் நடைச்சீட்டு எனும்இ.பெர்மிட் குவாரி குத்தகைதாரர்கள் பெறுவது கட்டாயம்,' என, கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: மாவட்ட புவியியல், சுரங்கத்துறை சார்பில் 2024 செப்.6 முதல்www.mimastn.gov.in என்ற இணையத்தளம் மூலம் குவாரியில் இருந்து எடுத்து செல்லும் கனிமங்களுக்கு மொத்த அனுமதிக்கான சீட்டு வழங்கப்படும் நடைமுறை உள்ளது.
சிறுகனிம சலுகை விதிப்படி அரசு புறம்போக்கு நிலங்களில் குவாரிஉரிமம் கோரும் விண்ணப்பம் பட்ட நிலம் 31 வகை சிறு கனிமங்கள் எடுக்க குவாரி உரிமம் கோரும் விண்ணப்பம், கனிம நிலுவைத்தொகை இன்மை சான்றிதழ் போன்றவைகளுக்கு 2025 ஏப்.7 முதல் www.mimastn.gov.inஎன்ற இணையத்தில் விண்ணப்பம் செய்து பயன் பெறலாம்.
மேலும் 2025 ஏப்.15ல் இணையத்தில் விண்ணப்பம் செய்து, குவாரியிலிருந்து எடுத்துச் செல்லப்படும் அனைத்து வகை கனிமங்களுக்கும் நடைச்சீட்டு எனும் இ.பெர்மிட் பெற்றுக் கொள்ள குவாரி குத்தகைதாரர்கள்அறிவுறுத்தப்படுகின்றனர்.
கிரஷர் மற்றும் கனிம இருப்பு மையத்திலிருந்து எம்.சாண்ட், ஜல்லி போன்ற கனிமங்கள் ஏற்றிச் செல்லும் போது புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் இருந்து உரியநடைச்சீட்டு பெற்று கொண்டுசெல்ல வேண்டும் என்பது கட்டாயம் என அவர் தெரிவித்துள்ளார்.