/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உத்தமபாளையம் பேரூராட்சியில் கலெக்டர் ஆய்வு
/
உத்தமபாளையம் பேரூராட்சியில் கலெக்டர் ஆய்வு
ADDED : பிப் 23, 2024 05:37 AM
உத்தமபாளையம்: உத்தமபாளையத்தில் இருந்து உ. அம்மாபட்டி வரை நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் கலெக்டர் ஷஜீவனா நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
உங்கள் ஊரில் உங்களைத் தேடி என்ற திட்டத்தின் கீழ் உத்தமபாளையம் தாலுகாவில் பிப். 22 காலை முதல் 23 காலை வரை பல்வேறு அலுவகங்கள், பஸ் ஸ்டாண்டுகளின் நிலை, காலை உணவு திட்டம் ஆகியவற்றினை கலெக்டர் கள ஆய்வு செய்தார்.
நேற்று காலை உத்தமபாளையம் அரசுமருத்துவனையிலிருந்து, உ .அம்மாபட்டி வரை நடைப பயிற்சி மேற்கொண்டார். அவருடன் வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ் செல்வன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். அதிகாலை 5:45 மணிக்கு உத்தமபாளையம் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்வதை ஆய்வு செய்தார். அவர்களுடன் கலந்துரையாடினார்.