நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் ஒன்றியம், கீழ வடகரை ஊராட்சி ஸ்டேட் பாங்க் காலனி செல்லும் நுழைவு பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடையில் டூவீலர், வாகனங்களை நிறுத்துவதால் இடையூறு ஏற்படுகிறது.
இது பற்றி நேற்று தினமலர் நாளிதழில் ஆக்கிரமிப்பு அட்டகாசம் பகுதியில் படம் வெளியானது. இது குறித்து கலெக்டர் ரஞ்ஜீத்சிங், பெரியகுளம் டி.எஸ்.பி.,யிடம் விளக்கம் கேட்டார்.
இதனை தொடர்ந்து போக்குவரத்து சிறப்பு எஸ்.ஐ., ராஜாமணி, பல நாட்களாக பயணிகள் நிழற்குடையில் நிறுத்தப்பட்டிருந்த செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வாகனம் 'டி.என். 57. டி.1881க்கு ரூ.500 அபராதமாக வாகன உரிமையாளர் மகாலட்சுமியிடம் வசூலித்து பயணிகள் நிழற்குடையில் நிறுத்த கூடாது என எச்சரித்தார்.

