/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிறுமி கர்ப்பம்: ஒருவர் மீது போக்சோ வழக்கு
/
சிறுமி கர்ப்பம்: ஒருவர் மீது போக்சோ வழக்கு
ADDED : நவ 21, 2025 05:16 AM
கடமலைக்குண்டு: தேனி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 15 வயது மாணவி தொடர்ந்து பள்ளிக்கு செல்லவில்லை. சிறுமியின் உறவினரான, வருஷநாடு பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டியை 3 ஆண்டுகளாக காதலித்துள்ளார்.
அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று வந்துள்ளார். கடந்த ஜூனில் முத்துப்பாண்டி வீட்டிற்கு சென்ற சிறுமி அங்கு 10 நாட்கள் தங்கினார். இதனை பயன்படுத்திய முத்துப்பாண்டி சிறுமியுடன் பாலியல் உறவு கொண்டதால் கர்ப்பமானார்.
தகவல் அறிந்த தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் போதுமணி விசாரணை மேற்கொண்டார். சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான முத்துப்பாண்டி மீது கடமலைக்குண்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் முத்துப்பாண்டி மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

