ADDED : ஏப் 25, 2025 07:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி நகர்பகுதியில் நடந்து வரும் ரயில்வே மேம்பால பணிகள், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே ராஜவாய்க்காலில் பாலம் அமைக்கும் பணி, மதுரை ரோடு ரயில்வே கேட்டில் சேதமடைந்த கூட்டு குடிநீர் திட்ட குழாய் சீரமைப்பு பணி, அறிவுசார் மையம் ஆகிய இடங்களில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் ஆய்வு மேற்கொண்டார்.
கமிஷனர் ஏகராஜ், முதுநிலை பொறியாளர் குணசேகரன், நகர் நல அலுவலர் கவிப்பிரியா, தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ரம்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

