நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேர்தல் ஆணைய உத்தரவின் படி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த முகாம் நடந்தது.
பல இடங்களில் பெயர் சேர்க்க மனுக்கள் அளித்தனர். தேனியில் ஆர்.சி.,உயர்நிலைப்பள்ளி, அரண்மனைப்புதுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த முகாமை கலெக்டர் ரஞ்ஜீத்சிங் ஆய்வு செய்தார். இம்முகாம் இன்று, 2026 ஜன., 3,4 ஆகிய நாட்களில் நடக்கிறது. பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், பிழைத்திருத்தம், புகைப்பட மாற்றம் உள்ளிட்டவற்றிற்கு முகாமில் விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

