ADDED : டிச 28, 2025 05:36 AM
தொண்டாமுத்தூர்: தொழிலாளியை தாக்கி கொலை செய்த வழக்கில், எஸ்.சி. - எஸ்.டி., ஆணையத்தினர் விசாரிக்கின்றனர்.
கோவை மாவட்டம், சீங்கப்பதி மலைக்கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை, 35; கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி, ஒரு மகன் உள்ளார்.
நவ., 6ம் தேதி, இரவு, ஆலாந்துறை, டாஸ்மாக் கடை அருகே, ராஜதுரை நின்று கொண்டிருக்கும்போது, தென்காசியை சேர்ந்த ராமன் மற்றும் லட்சுமணன் ஆகிய சகோதரர்கள், ராஜதுரையிடம் மது அருந்த பணம் கேட்டு தாக்கியதில், ராஜதுரைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராஜதுரை, 10 நாளில் இறந்தார். ஆலாந்துறை போலீசார், ராமன் மற்றும் லட்சுமணனை கைது செய்தனர்.
இந்நிலையில், மாநில எஸ்.சி., - எஸ்.டி., ஆணைய உறுப்பினர்கள் செல்வகுமார், பொன்தோஸ், தெற்கு ஆர்.டி.ஓ., மாருதி பிரியா ஆகியோர் அடங்கிய குழுவினர், நேற்று சீங்கப்பதி மலை கிராமத்தில் விசாரணை நடத்தினர்.

