ADDED : ஜூலை 11, 2025 03:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லுாரியில் பேரவை துவக்க விழா நடந்தது. செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில், இணைச் செயலர் வசந்தன், ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி முன்னிலை வகித்தனர். முதல்வர் ரேணுகா வரவேற்றார்.
கல்லுாரி பேரவை தலைவராக இரண்டாமாண்டு முதுகலை ஆங்கிலத் துறை மாணவி நர்கீஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலாளராக மூன்றாமாண்டு கணினி அறிவியல் துறை மாணவி ஜெயபிரபா, இணைச் செயலாளர்களாக இரண்டாமாண்டு ஆங்கிலத்துறை மாணவி பவதாரணி, முதலாமாண்டு வணிகவியல் துறை மாணவி அமுதப்பிரியா தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாணவிகள் உறுதிமொழி எடுத்தனர். ஆலோசனைக் குழு உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், துணை முதல்வர் வாணி, தமிழ் துறை உதவிப் பேராசிரியை தமிழ்ச்செல்வி, கணிதவியல் துறை உதவி பேராசிரியை தேவி, விரிவுரையாளர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.