/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விளையாட்டு போட்டிகளில் கல்லுாரி மாணவிகள் அசத்தல்
/
விளையாட்டு போட்டிகளில் கல்லுாரி மாணவிகள் அசத்தல்
ADDED : செப் 19, 2024 05:39 AM

தேனி: மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த கல்லுாரி மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் மாணவிகள் ஆர்வமாக விளையாடி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
மாவட்டத்தில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கம், ஆயுதப்படை மைதானம், நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நாடார் சரஸ்வதி கல்லுாரியில் நடந்தது. நேற்று கல்லுாரி மாணவிகளுக்கான வாலிபால், தடகளம், தடைதாண்டுதல் ஓட்டம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன. போட்டிகளில் மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
கல்லுாரி மாணவர்கள், மாணவிகள் பிரிவில் நடந்த போட்டியில்முதல் மூன்று இடங்களில் வெறறி பெற்றவர்கள் விபரம்:
கிரிக்கெட்: ஆண்டிபட்டி பாரத்நிகேதன் பொறியியல் கல்லுாரி, உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லுாரி, போடி அரசு பொறியியல் கல்லுாரி.
பெண்கள் பேட்மிட்டன் (இரட்டையர்): பாலவிகாஷினி, சக்திஅபிநயா, சுபஸ்ரீ, பூஜா நிதிலா, ரவீனா, ஒற்றையர் பிரிவு:பாலவிகாஷினி, அபினயா, பூஜாநிதிலா.
ஹேண்ட் பால்: எஸ்.ஏ.சி., பெண்கள் கல்லுாரி, திரவியம் பெண்கள் கல்லுாரி, என்.எஸ்., கலை அறிவியல் கல்லுாரி.கேரம் ஒற்றையர்:கபினிஷி, அபிதா, கனிஷ்கா, கேரம் இரட்டையர் : மோனிஷா, மகேஸ்வரி. ஸ்ரீராணி, திவ்யதர்ஷினி. கார்த்திகா, பவித்ரா.டேபிள் டென்னிஸ் ஒற்றையர்: மனோரஞ்சிதம், விஷாலிஸ்ரீ, சவுந்தர்யா.
டேபிள் டென்னிஸ் இரட்டையர்: சவுந்தர்யா, ரேஷ்மா, கனி முத்து, வெண்ணிலா, வைஷாலிஸ்ரீ, ஆஷிகா.