ADDED : அக் 26, 2024 07:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தமபாளையம்: மாவட்டத்தில் ஒரு லட்சம் பனை விதைகள் நடவு செய்ய அரசு இலக்கு நிர்ணயத்துள்ளது.
இதனை தொடர்ந்து உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரி வளாகத்தில் ஒரே நேரத்தில் 500 மாணவிகள் பனை விதை நடவு செய்யும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தாளாளர் தர்வேஷ்முகைதீன் தலைமை வகித்தார். ஆட்சி மன்ற குழு தலைவர் முகமது மீரான் முன்னிலை வகித்தார்.
கல்லூரி முதல்வர் சிராஜ்தீன் வரவேற்றார். வளாகத்தில் 500 மாணவிகள் பனைவிதைகளை நடவு செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர் அக்பர் அலி, நன்செய் தொண்டு நிறுவன நிர்வாகி செந்தில் ஆகியோர் செய்திருந்தனர்.