ADDED : ஜூலை 23, 2025 12:24 AM
கூடலுார்; கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லுாரியில் மூன்று நாட்கள் நடைபெறும் கல்லுாரி சந்தை நிகழ்ச்சியை செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில், கலெக்டர் ரஞ்சித்சிங் துவக்கி வைத்தார்.
மாவட்ட மகளிர் மேம்பாட்டு நிறுவனம், ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரி இணைந்து நடத்தியது.
இணைச் செயலாளர் வசந்தன், ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி, முதல்வர் ரேணுகா முன்னிலை வகித்தனர். அனைத்து மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருள்கள் இக்கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது.
மூங்கில் கூடைகள், கைவினைப் பொருட்கள், நவதானியங்களால் செய்யப்பட்ட சிற்றுண்டிகள், அழகு சாதன பொருட்கள், ஹோம் மேட் சாக்லேட் வகைகள், காட்டன் சேலைகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. மாணவிகளின் விற்பனை திறனை மேம்படுத்தும் வகையிலும், தொழில் முனைவோருக்கான சிறந்த பயிற்சியாகவும் இக்கண்காட்சி இடம்பெற்றிருந்தது.
துணை முதல்வர் வாணி, விரிவுரையாளர்கள், மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.