ADDED : ஜூலை 23, 2025 12:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி; தேனி கலெக்டர் அலுவலகம் அருகே ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட, வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு நிரந்தரம் பணியிடத்தில் பணி நியமனம் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்,
அனைத்து தற்காலிக பணியாளர்களுக்கும் பி.எப்., இ.எஸ்.ஐ., குடும்ப நல நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி சாப்பாட்டு பாத்திரத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் முருகனந்தம் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் பேயத்தேவன், மாவட்ட செயலாளர் சண்முக நாதன், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட நிர்வாகிகள் பாண்டி, ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.