கருத்தரங்கம் தேனி: கொடுவிலார்பட்டியில் உள்ள தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரியில் வணிகவியல், வங்கியில், தொழில்முறை கணக்கியல் துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி முதல்வர் தலைமை வகித்தார். கலசலிங்கம் ஆராய்ச்சி, கல்வி அகாடமி பேராசிரியர் கார்த்திக், வணிகவியல் ஆராய்ச்சி, முதன்மை தரவு, 2ம் தரவு உள்ளிட்டவை பற்றி விளக்கினார். வணிகவியல் துணைத்தலைவர் மைதலி தலைமையில் பேராசிரியர் கருத்தரங்கை ஒருங்கிணைத்தனர்.
ஓணம் கொண்டாட்டம் தேனி: தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் நடந்தது. கல்லுாரி செயலாளர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். இணைச்செயலாளர் சுப்ரமணி முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் மதளைசுந்தரம் வரவேற்றார். கலைநிகழ்ச்சிகள் நடந்தன. தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறை நிர்வாகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்லுாரி துணை முதல்வர்கள், பேராசிரியர்கள் விழாவை ஒருங்கிணைத்தனர்.