ADDED : ஜன 23, 2024 05:13 AM

மூணாறு: எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 12 பேர் ஆறு டூவீலர்களில் மூணாறுக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் நேற்று மூணாறில் இருந்து காந்தலூர் சென்றனர்.
மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் தலையார் எஸ்டேட் அருகே 'எஸ்' வளைவு பகுதியில் பகல் 1:30 மணிக்கு சென்றபோது எர்ணாகுளம் டவுன் ஹால் ரோட்டைச் சேர்ந்த ஆண்டனிஅனுப் 23, ஓட்டிச் சென்ற டூவீலர் மீது எதிரே ஆலுவா நோக்கிச் சென்ற தனியார் பஸ் மோதியது.
அதில் ஆண்டனிஅனுப், அவருடன் சென்ற எர்ணாகுளம் தம்மனம் பகுதியைச் சேர்ந்த விபின் ஜெயகிருஷ்ணன் 23, ஆகியோர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.
ரோட்டில் கிடந்த இருவரையும் மருத்துவமனையில் அனுமதிக்க அந்த வழியில் வந்த வாகனங்கள் எதுவும் தயாராகவில்லை. அதனால் இருவரும் அரை மணி நேரம் ரோட்டில் கிடந்தனர். அதன் பிறகு அந்த வழியில் வந்த காரில் இருவரையும் மூணாறில் உள்ள டாடா மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோது வழியில் விபின்ஜெயகிருஷ்ணன் இறந்தார். ஆண்டனிஅனுப் சிகிச்சை பெற்று வருகிறார். மறையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

