/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டூவீலர்கள் மோதிய விபத்தில் கல்லுாரி மாணவர் பலி மூவர் காயம்
/
டூவீலர்கள் மோதிய விபத்தில் கல்லுாரி மாணவர் பலி மூவர் காயம்
டூவீலர்கள் மோதிய விபத்தில் கல்லுாரி மாணவர் பலி மூவர் காயம்
டூவீலர்கள் மோதிய விபத்தில் கல்லுாரி மாணவர் பலி மூவர் காயம்
ADDED : நவ 13, 2024 06:49 AM

போடி : போடி அருகே தர்மத்துப்பட்டி கருப்பசாமி கோயில் தெருவை சேர்ந்தவர் வீரராஜ் 26, எலக்ட்ரீசியன். இவர் பெருமாள் கோயில் தெரு ராஜமாணிக்கத்துடன் நேற்று வேலைக்காக டூவீலரில் பரமசிவன் தெருவில் சென்றுள்ளார்.
போடி சுப்புராஜ் நகர் வெண்ணிமலை தெரு விமல் ராஜ் 21. இவர் போடி தனியார் கல்லூரியில் பி.காம்., சி.ஏ., 3 ம் ஆண்டு படித்து வந்தார். இவர் ஜே.கே., பட்டியை சேர்ந்த சூர்ய பிரகாஷ் உடன் வஞ்சி ஓடை வழியாக டூவீலரில் வேகமாக வந்துள்ளார். வல்லடிகாரசாமி கோயில் அருகே வரும் போது வீரராஜ் ஓட்டி சென்ற டூவீலர் மீது மோதியது.
இவ் விபத்தில் வீரராஜ், ராஜமாணிக்கம் கீழே விழுந்ததில் ராஜமாணிக்கத்தின் தலையிலும், வீரராஜ் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. கீழே விழுந்ததில் விமல்ராஜ்க்கு தலையில் காயம் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார். வீரராஜ், ராஜ மாணிக்கம், சூர்ய பிரகாஷ் உட்பட 4 பேரையும் போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பரிசோதனை செய்ததில் விமல்ராஜ் வரும் வழியில் இறந்ததாக டாக்டர் தெரிவித்துள்ளார்.
ராஜமாணிக்கம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். போடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

