ADDED : அக் 27, 2024 04:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டியை சேர்ந்தவர் ராமமூர்த்தி 49, இவரது மகள் சிவ ரூபியா 20,
பெரியகுளம் தனியார் கல்லூரியில் பி.பி.ஏ., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இரு நாட்களுக்கு முன் சிவரூபியா மொபைலில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததை தந்தை கண்டித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கல்லூரிக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் வீட்டிற்கு வரவில்லை. ராமமூர்த்தி புகாரில் ராஜதானி போலீசார் விசாரிக்கின்றனர்.