நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே மேல மஞ்சிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சுருளிவேல், உடல்நிலை சரியில்லாத இவர் தனது
அண்ணன் பழனிச்சாமியுடன் கூட்டு குடும்பமாக வசிக்கின்றனர். சுருளிவேல் மகள் மாதவகனி 22, தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி செல்வதாக கூறி சென்ற மாதவகனி திரும்ப வரவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. பழனிச்சாமி புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.