/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விளையாட்டு போட்டிகளில் கல்லுாரி மாணவிகள் ஆர்வம்
/
விளையாட்டு போட்டிகளில் கல்லுாரி மாணவிகள் ஆர்வம்
ADDED : ஆக 31, 2025 04:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்ட விளையாட்டு அரங்கில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. நேற்று கல்லுாரி மாணவிகளுக்கான போட்டிகள் நடந்தது.
அதில் கிரிக்கெட், கால்பந்து, கபடி போட்டிகளில் மாவட்டத்தில் பல்வேறு கல்லுாரிகளைச் சேர்ந்த சுமார் 300 மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். நாளை(செப்.,1) பள்ளி மாணவிகளுக்கான தடகளம், செஸ், கேரம், சிலம்பம், நீச்சல், கைப்பந்து போட்டிகள், பள்ளி மாணவர்களுக்கு கூடைப்பந்து, வாலிபால், ஹாக்கி, கோ கோ போட்டிகள் நடக்கிறது. கல்லுாரி பிரிவில் டேபிள் டென்னிஸ் போட்டி நடக்கிறது.

