/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பம் - கோம்பை ரோட்டை அகலப்படுத்தும் நடவடிக்கை துவக்கம்
/
கம்பம் - கோம்பை ரோட்டை அகலப்படுத்தும் நடவடிக்கை துவக்கம்
கம்பம் - கோம்பை ரோட்டை அகலப்படுத்தும் நடவடிக்கை துவக்கம்
கம்பம் - கோம்பை ரோட்டை அகலப்படுத்தும் நடவடிக்கை துவக்கம்
ADDED : ஜன 07, 2025 05:26 AM
கம்பம்: கம்பத்திலிருந்து கோம்பை செல்ல புதுப்பட்டி, காக்கில்சிக்கையன்பட்டி, கோவிந்தன்பட்டி, அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம் வழியாக கோம்பைக்கு செல்ல வேண்டும். குறைந்தது 15 கி.மீ. தூரம் பயணம் செய்ய வேண்டும்.
ஆனால் கம்பத்திலிருந்து ஊத்துக்காடு வழியாக செல்லும்  கோம்பை ரோட்டில் சென்றால், மேற் கூறிய ஊர்களுக்கு செல்லாமல் நேரடியாக கோம்பைக்கு சென்று விடலாம். கம்பத்திலிருந்து கோம்பைக்கு  பைபாஸ் ரோடு போன்று இந்த ரோடு பயன்படுகிறது.
பயண தூரம் வெறும்  6 கி.மீ. மட்டுமே.  15 நிமிடங்களில் செல்ல முடியும். ஆனால் உத்தமபாளையம் வழியாக சென்றால் குறைந்தது 30 முதல் 40 நிமிடங்கள் ஆகும்.
எனவே பெரும்பாலும் ஏலத்தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், வியாபா ரிகள் என பல தரப்பினர் கோம்பையிலிருந்து கம்பம் வர  இந்த ரோட்டை பயன்படுத்துகின்றனர்.
மிகவும் குறுகலாகவும், பல அபாய வளைவுகளை கொண்டதாகவும் ரோடு உள்ளது.
பராமரிப்பு செய்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தார் ரோடு தற்போது மண் ரோடுபோல் மாறி விட்டது.
காலை முதல் இரவு வரை வாகனங்கள் நூற்றுக்கணக்கில்   சென்று வருகின்றன.   புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம் விவசாயிகளுக்கு பெரிதும் பயன்படுகிறது.
கம்பம் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ரோட்டை மாநில நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்த உள்ளது.
இதற்கிடையே இந்த ரோட்டை அகலப்படுத்தி பராமரிப்பு செய்ய மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. விரைவில் பணிகள் துவங்கும் என்றும் ஊராட்சி ஒன்றிய வட்டாரங்கள் கூறுகின்றன.

