நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் : பெரியகுளம் நகராட்சி கமிஷனராக தமிகா சுல்தானா பொறுப்பேற்றார்.
இவர் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று, பயிற்சி முடித்து முதன் முதலாக இங்கு கமிஷனராக பொறுப்பேற்றுள்ளார். இவர் கூறியதாவது: பெரியகுளம் நகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து, வ.உ.சி., பூங்கா மேல்நிலைத் தொட்டிக்கு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால் நவ.14 மாலை, நவ.15 காலை, மாலை குடிநீர் வினியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.