/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மதுரை-போடி மின்மயமாக்கல் நிறைவு பெறாததால் பயணிகள் பரிதவிப்பு
/
மதுரை-போடி மின்மயமாக்கல் நிறைவு பெறாததால் பயணிகள் பரிதவிப்பு
மதுரை-போடி மின்மயமாக்கல் நிறைவு பெறாததால் பயணிகள் பரிதவிப்பு
மதுரை-போடி மின்மயமாக்கல் நிறைவு பெறாததால் பயணிகள் பரிதவிப்பு
ADDED : செப் 07, 2024 06:57 AM
தேனி: மதுரை-போடி வழித்தடத்தில் மின்மயமாக்கும் பணி தாமதமாகி வருவதால் சென்னையில் இருந்து போடி வரும் அதிவிரைவு ரயில் மதுரை ரயில் நிலையத்தில் 40 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டியுள்ளதால் பயணிகள் பரிதவிக்கின்றனர். இதனால் பயணிகள் திண்டுக்கலில் இருந்து பஸ்சில் போடி வரும் நிலை தொடர்கிறது.
ஓராண்டிற்கு முன் போடியில் இருந்து சென்னைக்கு அதிவிரைவு ரயில் சேவை துவங்கியது. இந்த ரயில் வாரத்திற்கு மூன்று நாட்களும், மதுரை-போடி பாசஞ்சர் ரயில் தினமும் இருமார்கத்திலும் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து போடி வரை இயக்கப்படும் ரயிலில் அதிக அளவில் பயணிகள் தேனி மாவட்டத்திற்கு வருகின்றனர்.
மதுரை போடி ரயில் வழித்தடம் ரூ.80 கோடி செலவில் மின்மயமாக்கும் பணிகள் ஓராண்டிற்கு முன் துவங்கியது. இப் பணி நிறைவு பெற்றாலும் சோதனை ஓட்டம் மட்டுமே நடந்தது.
சென்னை போடி ரயில் திண்டுக்கலுக்கு அதிகாலை 5:40 மணிக்கும், மதுரைக்கு 7:00 மணிக்கு முன்னதாக வருகிறது. மதுரையில் ரயிலில் இருந்து மின்சார இன்ஜின் பிரிக்கப்பட்டு, டீசல் இன்ஜின் சேர்க்கப்படுகிறது.
இதற்கு 40 நிமிடத்திற்கு மேல் ஆகிறது. இதனால் ரயில் தாமதமாக புறப்புட்டு, தேனிக்கு 9:00 மணிக்கு வருகிறது. மதுரையில் 40 நிமிடங்களுக்கு மேல் காத்திருப்பதால் பயணிகள் அவதி அடைகின்றனர். இதனால் பயணிகள் பலர் திண்டுக்கலில் இறங்கி பஸ் மூலம் தேனி வருகின்றனர்.பயணிகள் கூறுகையில், மதுரை -போடி ரயில் பாதையில் விரைவில் மின்மயமாக்கல் பணியை முடித்து மின்சார ரயில் இயக்க வேண்டும். முன்னர் கலெக்டர் அலுவலக ஸ்டாப் என இருந்த நிறுத்தத்தை, தேனி சார்நிலை கருவூலம் அருகே அமைக்க வேண்டும்.
புது பஸ் ஸ்டாண்ட் அருகே அமைவதால், பல பயணிகள் பயனடைவர். இந்த வழித்தடத்தில் மின்மயமாக்கல் பணி முடியும் வரை, மதுரையில் டீசல் இன்ஜின் மாற்றும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றனர்.