/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
44 விவசாயிகளுக்கு ரூ.7.12 லட்சம் இழப்பீடு
/
44 விவசாயிகளுக்கு ரூ.7.12 லட்சம் இழப்பீடு
ADDED : செப் 27, 2025 04:40 AM
தேனி: மாவட்டத்தில் நெல்சாகுபடியில் மகசூல் குறைந்த 44 விவசாயிகளுக்கு ரூ. 7.12 லட்சம் இழப்பீடு வழங்க உள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்தனர்.
வேளாண் துறையினர் கூறியதாவது: தமிழக அளவில் வேளாண் துறை சார்பில் கடந்தாண்டு நவ., நெல் சாகுபடி செய்த நிலங்கள் ரேண்டம்' முறையில் தேர்வு செய்யப்பட்டன. அவற்றில் அறுவடையின் போது மகசூல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் மாவட்ட சராசரியை விட சாகுபடி குறைந்து காணப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் பணி நடக்கிறது. மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் ஆண்டிபட்டி 4, கண்டமனுார் 15, தேவதானப்பட்டி 13, போடி 3, ராசிங்காபுரம் 4, கோடங்கிபட்டி 2, தென்கரை, தேனி, சின்னமனுார் தலா ஒரு விவசாயிகள் என மொத்தம் 44 விவசாயிகளின் நிலங்களில் மகசூல் குறைந்திருந்தது. இவர்களுக்கு சாகுபடி இழப்பை பொறுத்து குறைந்த பட்சம் ரூ. 1089 முதல் அதிகபட்சம் ரூ. 2.33 லட்சம் வரை என மொத்தம் ரூ.7.12 லட்சம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தனர்.