ADDED : ஜூலை 19, 2025 11:53 PM
போடி: போடி அருகே மீனாட்சிபுரம் காந்தி மெயின் ரோட்டில் வசிப்பவர் ராமர், இவரது மனைவி போதுமணி 54. கூலித் தொழிலாளி. இவர் கடந்த ஏப். 2 ல் ஜெயராஜ் என்பவரது வயலில் வேலை செய்வதற்காக சென்றுள்ளார். வயல் அருகே மின் கம்பத்தில் இருந்த மின் கம்பி அறுந்து கீழே விழுந்து கிடந்து உள்ளது. போதுமணி நடந்து சென்ற போது மின்சாரம் தாக்கியது. போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் போதுமணி இறந்தார்.
இறந்த போதுமணியின் குடும்பத்திற்கு தமிழக அரசு மூலம் இழப்பீடு தொகையாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையை தங்க தமிழ்ச் செல்வன் எம்.பி., நேற்று வழங்கினார். உடன் தேனி செயற்பொறியாளர் ரமேஷ் குமார் (பொது) செயற்பொறியாளர் முருகேஸ்பதி , போடி உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார், தி.மு.க., போடி மேற்கு ஒன்றிய செயலாளர் லட்சுமணன், நகர செயலாளர் புருஷோத்தமன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆசிப்கான் உட்பட பலர் பங்கேற்றனர்.