/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காவலாளியை மிரட்டியதாக உள்நோயாளி மீது புகார்
/
காவலாளியை மிரட்டியதாக உள்நோயாளி மீது புகார்
ADDED : ஜூன் 24, 2024 02:06 AM
ஆண்டிபட்டி : போடி உப்புக்கோட்டை வடக்கு தெரு கணேசன் 40. தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த பணியாளராக உள்ளார். ஜூன் 14 இரவுப் பணியில் இருந்த போது மருத்துவமனை வளாகத்தில் உள்ள விநாயகர் கோயில் அருகே சண்டை போடுவது போன்ற சத்தம் கேட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கணேசன், அவருடன் பணிபுரியும் ஆனந்தராஜ், ராஜ்குமார் ஆகியோர் சென்று பார்த்தனர்.
அப்போது அல்லிநகரம் பாண்டி கோயில் தெருவை சேர்ந்த வீரப்பன் 35, தனது தாயாரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளதாகவும் எந்த வார்டில் இருப்பதாக தெரியவில்லை என்றும் பாதுகாப்பு பணியில் இருந்த வினோத்குமாரின் மொபைல் போனை கேட்டு பிரச்னை செய்துள்ளார். பின் அங்கிருந்தவர்கள் வீரப்பனை மருத்துவமனை வளாகத்தில் இருந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அனைவரையும் தகாத வார்த்தைகளால் திட்டி, கையால் தாக்கியுள்ளார். போலீஸ் ஸ்டேஷன் படியில் அமர்ந்து கொண்டு பெண் எஸ்.ஐ., கிரிஜாவுடனும் தகராறு செய்துள்ளார். சிறிது நேரத்திற்கு பின் அங்கிருந்து வெளியே சென்று விட்டார். கணேசன் உட்பட அவருடன் இருந்தவர்கள் தங்களது பணிக்கு சென்று விட்டனர். இந்நிலையில் உடல் நலக்குறைவால் வீரப்பன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சைக்கு சென்றுள்ளார். அப்போது செக்யூரிட்டி கணேசனுடன் மீண்டும் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து கணேசன் புகாரில், க.விலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.