/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நெல் கொள்முதல் நிலையத்தில் மூடைக்கு ஒரு கிலோ அதிகம் பெறுவதாக புகார்
/
நெல் கொள்முதல் நிலையத்தில் மூடைக்கு ஒரு கிலோ அதிகம் பெறுவதாக புகார்
நெல் கொள்முதல் நிலையத்தில் மூடைக்கு ஒரு கிலோ அதிகம் பெறுவதாக புகார்
நெல் கொள்முதல் நிலையத்தில் மூடைக்கு ஒரு கிலோ அதிகம் பெறுவதாக புகார்
ADDED : பிப் 04, 2024 03:24 AM

தேவதானப்பட்டி : நெல் கொள்முதல் நிலையத்தில் ஒரு மூட்டைக்கு ஒரு கிலோ நெல் கூடுதலாக வாங்குவதும், ஊக்கத்தொகை வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
பெரியகுளம் அருகே மேல்மங்கலத்தில் ஒரு வாரமாக நெல் அறுவடை துவங்கியுள்ளது. நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் மேல்மங்கலம் சமுதாயக்கூடத்தில் நெல் கொள்முதல் நிலையம் இரு நாட்களாக செயல்படுகிறது. கொள்முதல் நிலையத்திற்கு ஏராளமான விவசாயிகள் நெல் மூடைகளை கொண்டு வருகின்றனர். தினமும் ஆயிரம் முதல்1500 மூடை வரத்து உள்ளது. , ஒவ்வொரு சீசனுக்கும் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் நெல் மூடைகள் கொள்முதல் செய்யப்படுகிறது. கிலோ ரூ.23.10 பைசா வீதம் 40 கிலோ மூடைக்கு ரூ.924 வீதம் விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
ஒரு மூட்டை நெல்லின் எடை 40.580 கிலோ (சாக்கு உட்பட) இதில் சாக்கு எடை 580 கிராம்.
ஆனால் இங்குள்ள எடையாளர்கள் 41.580 கிராம் எடையை அளக்கின்றனர். ஒரு மூட்டைக்கு ஒரு கிலோ வீதம் கூடுதலாக பெறுகின்றனர். விவசாயிகள் எடை குறித்து கேள்வி கேட்டால், எடையாளர்கள் சம்பந்தப்பட்ட விவசாயிடம் நெல் எடை போடுவதில் காலதாமதம் ஏற்படுத்துகின்றனர்.
விவசாயிகள் கூறுகையில்: அரசு அறிவித்தபடி நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதம் வரை தரமான முறையில் எடைக்கு கொண்டு தருகிறோம். மூடைக்கு ஒரு கிலோ அதிகமாக வாங்குவதும், குவிண்டாலுக்கு ரூ.82 முதல் ரூ.107 வரை ரகம் வாரியாக அரசு வழங்கும் ஊக்கத்தொகை வழங்குவதிலும் பாரபட்சம் காட்டுவதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.
கொள்முதல் இடத்தில் நெல் மூடைகளை பாதுக்க தகர மேற்கூரை அமைக்க வேண்டும். இது குறித்து பல முறை கோரிக்கை வைத்துள்ளோம். இது வரை நடவடிக்கை இல்லை என்றார்.