/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அ.தி.மு.க., நிர்வாகிகள் தேனி எஸ்.பி.,யிடம் புகார்
/
அ.தி.மு.க., நிர்வாகிகள் தேனி எஸ்.பி.,யிடம் புகார்
ADDED : ஜன 04, 2024 06:32 AM
தேனி: தேனி அ.தி.மு.க., அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எஸ்.பி.,யிடம் அக்கட்சி நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப்பின் அ.தி.மு.க.,வில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. தற்போது அக்கட்சியின் பொதுச் செயலாளராக பழனிச்சாமி உள்ளார்.
தேனி போடி ரோட்டில் உள்ள கட்சி அலுவலகம் உள்ளது. இங்கு சில ஆண்டுகளுக்கு முன் அ.தி.மு.க., அ.ம.மு.க.,வினர் கூட்டம் நடத்த முற்பட்டதால் இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. யாரும் உள்ளே நுழைய அனுமதிக்காமல் போலீசார் பாதுகாப்பில் இருந்தனர். இது தொடர்பாக பெரியகுளம் ஆர்.டி.ஓ., தலைமையில் விசாரனை நடந்தது. பின் சட்டப்படி பிரச்னையை தீர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். இதனால் அலுவலகத்தை யாரும் கண்டு கொள்ளாமல் இருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அ.தி.மு.க., கட்சி அலுவலகத்தில் அ.ம.மு.க., மாவட்ட செயலாளர்கள் காசிமாயன், முத்துச்சாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்நிலையில் அ.தி.மு.க., கிழக்கு மாவட்டச் செயலாளர் ராமர் தலைமையில் தேனி எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் புகார் அளித்தனர். அதில், 'அ.தி.மு.க., அலுவலகத்தில் அத்துமீறலில் ஈடுபட்ட காசிமாயன், முத்துசாமி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.', என குறிப்பிடப்பட்டு இருந்தது. கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் ஜக்கையன், நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி செயலாளர் தீபன்சக்கரவர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.