/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பட்டா வழங்கக்கோரி சர்வேயருக்கு மிரட்டல் கலெக்டரிடம் புகார்
/
பட்டா வழங்கக்கோரி சர்வேயருக்கு மிரட்டல் கலெக்டரிடம் புகார்
பட்டா வழங்கக்கோரி சர்வேயருக்கு மிரட்டல் கலெக்டரிடம் புகார்
பட்டா வழங்கக்கோரி சர்வேயருக்கு மிரட்டல் கலெக்டரிடம் புகார்
ADDED : பிப் 02, 2025 04:31 AM
தேனி : தேனி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வேறு ஒருவரின் நிலத்திற்கு பட்டா வழங்க கோரி மிரட்டிய கட்சியினர் மூவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சர்வே பிரிவினர் கலெக்டர் ஷஜீவனாவிடம் புகார் அளித்தனர்.
தேனி நகராட்சி சர்வேயர் கணேஷ்குமார். நகராட்சி பகுதியில் உள்ள நிலத்திற்கு ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர் பட்டா கோரினார். ஆனால் நிலத்தை நிலத்தின் உரிமையாளரிடமிருந்து வாங்காமல், வேறு ஒருவரிடத்தில் வாங்கியது ஆவணங்கள் சரிபார்ப்பில் தெரிந்தது.
இந்நிலையில் பட்டா கேட்டவருக்கு ஆதரவாக அதே கட்சியை சேர்ந்த இருவர் வந்தனர். பட்டா வழங்கா விட்டால் பணிபுரிய விடமாட்டோம். கட்சிக்கு மாதந்தோறும் நிதி வழங்கவில்லை என்றால், போஸ்டர் ஒட்டி, ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என மிரட்டினர். இவர்கள் மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர்.