/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கூடலுார் நகராட்சியில் வரி வசூலிப்பதில் குளறுபடி குடிநீர் குழாயை காணோம் என புகார்
/
கூடலுார் நகராட்சியில் வரி வசூலிப்பதில் குளறுபடி குடிநீர் குழாயை காணோம் என புகார்
கூடலுார் நகராட்சியில் வரி வசூலிப்பதில் குளறுபடி குடிநீர் குழாயை காணோம் என புகார்
கூடலுார் நகராட்சியில் வரி வசூலிப்பதில் குளறுபடி குடிநீர் குழாயை காணோம் என புகார்
ADDED : டிச 20, 2024 03:27 AM
கூடலுார்: கூடலுார் நகராட்சியில் சொத்து வரி, குடிநீர் கட்டணம் வசூலிப்பதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. குடிநீர் இணைப்பு இல்லாத வீடுகளுக்கும் குடிநீர் கட்டணம் செலுத்தக் கோரி நோட்டீஸ் வழங்கியதால் 'குடிநீர் குழாயை காணோம்' என பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
கூடலுார் நகராட்சியில் 2024- -20-25ம் ஆண்டிற்கான சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக முன்கூட்டியே அனைத்து வீடுகளுக்கும் வரி பாக்கி குறித்த நோட்டீஸ் வழங்கப்பட்டது. குடிநீர் இணைப்பு இல்லாத வீடுகளுக்கும் அவர்களது பெயரில் குடிநீர் கட்டணம் செலுத்த கோரியும், சொத்து வரி செலுத்த ஒரு வீட்டிற்கு ஒரே பெயரில் இரண்டு நோட்டீஸ் வழங்கப்பட்டதாலும் பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
குடிநீர் இணைப்பு இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தக் கோரி வழங்கப்பட்ட நோட்டீசை வைத்துக் கொண்டு தினந்தோறும் நகராட்சி அலுவலகத்திற்கு நடந்த வண்ணம் உள்ளனர். அதில் ஒரு சிலர் 'கிணற்றைக் காணோம்' என சினிமா பட நகைச்சுவை பாணியில் 'குடிநீர் குழாயை காணோம்' அதை கண்டுபிடித்து தாருங்கள் என நகராட்சி அலுவலகத்தில் புகார் கூறியும் வருகின்றனர்.
குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின் இணைப்புகளை துண்டித்து நடவடிக்கை எடுத்துவரும் வேளையில், வரி வசூலிப்பதிலும் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை தவிர்க்க நகராட்சி அதிகாரிகள் முன் வர வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினர்.