/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சூப்பர் ரிப்போர்ட்டருக்கு வந்த புகார்கள் அதிகாரிகள் கவனத்திற்கு
/
சூப்பர் ரிப்போர்ட்டருக்கு வந்த புகார்கள் அதிகாரிகள் கவனத்திற்கு
சூப்பர் ரிப்போர்ட்டருக்கு வந்த புகார்கள் அதிகாரிகள் கவனத்திற்கு
சூப்பர் ரிப்போர்ட்டருக்கு வந்த புகார்கள் அதிகாரிகள் கவனத்திற்கு
ADDED : ஜன 02, 2026 05:44 AM

குப்பையில் தீ வைப்பதால் பாதிப்பு
ஆண்டிபட்டி கொண்டமநாயக்கன்பட்டி எட்டுக்கண் பாலத்தில் அடியில் கோழி கழிவுகளையும், குப்பை கொட்டி தீ வைப்பதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. குப்பையுடன் ஏற்கனவே பாலத்தில் செடி கொடிகள் வளர்ந்து புதர்மண்டி உள்ளது. பாலத்தில் குப்பை கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆர்.சிவபிரகாசம், ஆண்டிபட்டி.
குப்பையால் சுகாதாரக்கேடு
போடி அருகே மீனாட்சிபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகே குப்பைகளை கொட்டி தீ வைத்து வருகின்றனர். இதனால் வெளியேறும் புகையால் நடந்து செல்லும் மக்களுக்கு துர்நாற்றம் வீசுவதோடு, கண் எரிச்சல் உள்பட பல்வேறு வகையில் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. குப்பைக்கு தீ வைப்பதை தடுக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மனோஜ்குமார், பி. மீனாட்சிபுரம்.
ரோட்டில் திரியும் மாடுகளால் விபத்து
பெரியகுளம் மூன்றாந்தல் பகுதியில் பசு மாடுகளை பால் கறந்து விட்டு உரிமையாளர்கள் தீவனம் கொடுக்காமல் மாடுகளை ரோட்டில் விடுகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், அவ்வப்போது டுவீலரில் செல்பவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். ரோட்டில் மாடுகளை அவிழ்த்து விடும் உரிமையாளர்கள் மீது நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- முத்துச்சாமி, பெரியகுளம்.
ரோட்டோர மண் குவியல்
தேனி- மதுரை ரோட்டில் பல இடங்களில் ரோட்டரங்களில் மணல் குவிந்து காணப்படுகிறது. காற்று அதிகம் வீசும் போது நடந்து செல்பவர்கள், டூவீலர்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்க வழிவகை செய்கிறது. ரோட்டோர மணல் குவியல்களை அகற்ற நெடுஞ்சாலை துறை நடவடிக்கை வேண்டும்.
- கார்த்திக், பூதிப்புரம்.
பயன்பாட்டிற்கு வராத கழிப்பறை
தேனி நகராட்சி 12 வது வார்டில் கக்கன்ஜி காலனி 2வது குறுக்குத் தெருவில் உள்ள மகளிர் கழிப்பறை பயன்பாடு இன்றி உள்ளது. கழிப்பறை இன்றி பெண்கள் சிரமம் அடைகின்றனர். இதனை நகராட்சி நிர்வாகம் பயன்பாட்டிற்கு கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- போஸ், கக்கன்ஜி காலனி, தேனி.

