/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தெருவில் ஓடும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு தேனி அல்லிநகரம் நகராட்சி 12வது வார்டு மக்கள் அவதி
/
தெருவில் ஓடும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு தேனி அல்லிநகரம் நகராட்சி 12வது வார்டு மக்கள் அவதி
தெருவில் ஓடும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு தேனி அல்லிநகரம் நகராட்சி 12வது வார்டு மக்கள் அவதி
தெருவில் ஓடும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு தேனி அல்லிநகரம் நகராட்சி 12வது வார்டு மக்கள் அவதி
ADDED : ஜன 02, 2026 05:44 AM

தேனி: சேதமடைந்து குண்டு குழியுமாக தெருக்களில் முறையான சாக்கடை வசதி செய்யததால் கழிவு நீர் தெருவில் ஓடும் அவல நிலையும், பயன்பாட்டிற்கு வராத பெண்கள் கழிப்பறையால் துர்நாற்றம் வீசி சுகாதாரக்கேடு நிலவுவதாக தேனி நகராட்சி12வது வார்டு கக்கன்ஜி காலனி பொது மக்கள் குமுறுகின்றனர்.
இந்த வார்டில் கக்கன்ஜி காலனி 2 மெயின் ரோடுகள், அதில் 7 குறுக்குத் தெருகள் உள்ளன. கக்கன்ஜி நகரில் விரிவாக்கப் பகுதி மூன்றாவது தெருவின்கடைசியில் உள்ளது. இந்த விரிவாக்கப் பகுதியில் 600 குடும்பத்தினர் வசிக்கின்றனர். மூன்றாவது தெருவரை நகராட்சி பாதாள சாக்கடை இணைப்பு உள்ளது.அதன் பின் பாதாள சாக்கடை இணைப்புகள் இல்லை.
இப்பகுதியில் குப்பை பெற துப்புரவு பணியாளர்கள் வராததால் ரோட்டிலேயே குப்பை கொட்டுகின்றனர். சேரும் குப்பையை வாரத்திற்கு ஒருமுறை அகற்றப்படுவதால் சுகாதாரக்கேடு நிலவுகிறது. குறைந்த பட்சம் மூன்று நாட்களுக்கு ஒரு முறையாவது குப்பை அகற்ற வண்டிவர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இங்குள்ள பொது மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு நீண்ட துாரம் பயணித்து பாலன் நகருக்கு செல்கின்றனர். கக்கன்ஜி காலனியில் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என கோரி வருகின்றனர்.
நாய்கள் தொல்லை போஸ், கக்கன்ஜி காலனி தேனி: மூன்றாவது தெருவில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. சாக்கடை கட்டமைப்புகள் இல்லாததால் கழிவுநீர் ரோட்டில் செல்கிறது. மழை காலங்களில் தெருவில் நடந்து செல்லவே முடியாத அளவிற்கு ரோட்டில் சாக்கடை ஓடுகிறது. இதனால் முதியோர், பெண்கள் சிரமம் அடைகின்றனர். எங்கள் பகுதி விரிவாக்கப் பகுதியாகஉள்ளதால் குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
'பேவர் பிளாக்' பதிக்கணும் முருகவேல், கக்கன்ஜி காலனி, தேனி: குடிநீர் நான்கு நாட்களுக்கு ஒரு முறை அதுவும் அரைமணிநேரம்தான் வருகிறது. இதனால் குடிநீரை விலைக்குவாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. விரிவாககப்பகுதியை வார்டுடன் இணைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். தெருவில் ஓடும்கழிவுநீரில் உள்ள வால்புழுக்கள், வீட்டிற்குள் வருவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதனால் கக்கன்ஜி காலனியில் உள்ள அனைத்து தெருக்களிலும்பாதாள சாக்கடை, சாக்கடை வசதி, பேவர் பிளாக் கற்கள் பதிக்க வேண்டும். இதுகுறித்து நாங்கள் பலமுறை நகராட்சி, கலெக்டர் அலுவலங்களில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

