/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மழையால் எள் அறுவடை பாதிப்பு விலையும் குறைந்ததால் கவலை
/
மழையால் எள் அறுவடை பாதிப்பு விலையும் குறைந்ததால் கவலை
மழையால் எள் அறுவடை பாதிப்பு விலையும் குறைந்ததால் கவலை
மழையால் எள் அறுவடை பாதிப்பு விலையும் குறைந்ததால் கவலை
ADDED : ஜூலை 21, 2025 02:19 AM

கூடலுார்: கூடலுார் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் எள் அறுவடை பாதிப்பு ஏற்பட்டது. மேலும் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கூடலுார் அருகே உள்ள கல்லுடைச்சான்பாறை, கொங்கச்சிபாறை, பெருமாள் கோயில், கழுதைமேடு, பளியன்குடி, ஏகலுாத்து உள்ளிட்ட பகுதிகளில் 200 ஏக்கருக்கும் மேல் எள் சாகுபடி ஆகிறது. ஒரு வாரத்திற்கு முன், எள் அறுவடை துவங்கியது. துவங்கிய ஓரிரு நாட்களில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருவதால், அறுவடை பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அறுவடை செய்யப்பட்ட எள் கதிர்களை ஆங்காங்கே உள்ள களங்களில் குவித்து வைத்துள்ளனர். வெயிலில் உலர்த்தி காயிலிருந்து எள் தனியாக பிரித்தெடுக்க வேண்டும்.
ஆனால் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் குவித்து வைக்கப்பட்டிருந்த கதிர்கள் மழையில் நனைந்து வருகிறது. இந்த நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்த எள் கதிர்களை அறுவடை செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது: இந்தாண்டு எள் பயிரில் பூக்கள் அதிகமாகி கூடுதல் பலன் கிடைத்துள்ளது.
வரத்து அதிகம் இருந்த போதிலும் விலை குறைந்துள்ளது. கடந்தாண்டு 100 கிலோ எடை கொண்ட ஒரு குவிண்டாலுக்கு ரூ.20 ஆயிரம் வரை விலை இருந்தது. ஆனால், தற்போது 12 ஆயிரம் மட்டுமே விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
தற்போது மழையால் எள் பயிர்கள் நனைந்து மேலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது விவசாயிகளுக்கு அதிக சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது., என்றனர்.