/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியகுளத்தில் பாம்பு கடியால் பாதித்தோரை மருத்துவ கல்லுாரிக்கு அனுப்புவதால் அவதி

ADDED : நவ 28, 2024 05:53 AM
பெரியகுளம்: பாம்புகடியால் பாதித்து பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவோரை மருத்துவ கல்லுாரிக்கு பரிந்துரை செய்வதால் நோயாளிகள் சிரமம் அடைகின்றனர்.
பெரியகுளம் தாலுகா பகுதிகளில் பாம்பு கடியால் இறப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் ஜல்லிபட்டியில் எலுமிச்சை தோட்டத்தில் இருந்த துரைப்பாண்டி 52. பாம்பு கடித்து பலியானார். தற்போது மழை காலம் என்பதால் விவசாய நிலங்கள், தோட்டங்களிலும் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கீழ வடகரை ஊராட்சி செல்லா காலனி பகுதியில் வாரந்தோறும் பாம்புகள் பிடிக்கப்படுகிறது.
இப் பகுதியினர் பாம்பு கடித்துவிட்டால் பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். இங்கு விஷமுறிவு சிகிச்சை பிரிவு உள்ளது. இங்கு பாம்பு கடிக்கு செலுத்தும் ஏ.எஸ்.வி., (ஆண்டிபயாடிக் ஸ்நேக் வீனம்) ஊசி மருந்து இருந்தும் பயன்படுத்துவதில்லை. பாம்பு கடிக்கு வருபவர்களை தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்புகின்றனர். இதனால் நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனர். மாவட்ட மருத்துவமனையில் 24 மணி நேரம் பாம்பு கடிக்கு சிகிச்சை அளிக்க மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் ரமேஷ் பாபு நடவடிக்கை எடுக்க வேண்டும்.